Viral Video: சிஎஸ்கே வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய சாரா அலிகான்
சிஎஸ்கே வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய சாரா அலிகானின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வெற்றியை கொண்டாடிய சாரா அலிகான்
நேற்று அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் நடந்தது. இப்போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் திரில் வெற்றி பெற்றபோது, விக்கி கௌஷல் மற்றும் சாரா அலிகான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.