ஹைதராபாத் ப்ளே ஆஃப் கனவை தகர்த்த கொல்கத்தா அணி வெற்றி - ப்ளே ஆஃப் செல்வது எந்த அணி?

Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2022
By Rooban May 14, 2022 06:30 PM GMT
Report

ஐபில் போட்டியின் 61 வது லீக் சுற்று போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதன் பின்னர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் சிக்கி ரகானே (28) கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (15), நிதிஷ் ராணா (26) என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து, 94 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. பின்னர் வந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் அணியை தூக்கி நிறுத்தினர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கமே அதிர்ச்சி தான்.

கேப்டன் கேன் வில்லியம்சன் (9), ராகுல் திரிபாதி (9), நிகோலஸ் பூரண் (2), வாஷிங்டன் சுந்தர் (4) என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். அபிஷேக் சர்மா மட்டுமே 43 ரன்களை சேர்த்தார்.

ஹைதராபாத் ப்ளே ஆஃப் கனவை தகர்த்த கொல்கத்தா அணி வெற்றி - ப்ளே ஆஃப் செல்வது எந்த அணி? | Ipl 2022 Kkr Collapse The Srh Dream Of Playoff

ஆனால் அவருக்கு உறுதுணையாக யாரும் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. அதன்பின்னர், வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ஜதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணிக்கு ப்ளே ஆஃப் செல்ல பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

13 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில், வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் செல்ல வாய்ய்ப்பு உண்டு.

அதேப்போல், ஆர்சிபி அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே ப்ளே ஆஃப் சென்று விடும். ராஜஸ்தான் அணியும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

கடைசி இடத்திற்கு டெல்லி, பஞ்சாப், அணிகளும் போட்டி போடுகின்றன. எனவே இனி வரும் போட்டிகளில் எந்த அணி வெளியே செல்லும் போட்டியாகவே இருக்கும் என்பது தெரிகிறது.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US