சென்னை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா! அப்போ இந்த அணியில் கேப்டனா?
ஐபிஎல் 15-வது தொடரின் அடுத்த ஆண்டிற்கான போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் இணைவதும், அந்த அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகளுக்கு வீரர்களை எடுப்பதில் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், சென்னை அணிக்கான வீரர்களை தக்க வைப்பதில், நால்வரில், மகேந்திர சிங் டோனியை அடுத்த மூன்று வீரர்களாக ஜடேஜா, ருதுராஜ், மற்றும் பாப் டூப்ளிசிஸ் தக்க வைக்கப்படுவதாக தெரிகிறது.
ஆனால், ரசிகர்களால், சின்ன தல என அன்போடு அழைக்கப்படும் ரன் குவிக்க திணறுவதால் அவரை அணியை விட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஏலத்தின் மூலம் சென்னை அணிக்கு திரும்பவும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.
மேலும், சுரேஷ் ரெய்னா அப்படி சென்னை அணிக்கு செல்லவில்லை என்றால், புதிய அணிகளில் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.
ஒரு காலக்கட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த சுரேஷ் ரெய்னா இப்படி அணிக்கு தக்க கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.