ஐபோன் 15 இன் விலை இத்தனை லட்சமா? தலை சுற்றிப்போகும் இளைஞர்கள்
இன்றைய காலக்கட்டத்தில் நம்மிடையே அதிக ஆதிக்கம் செலுத்துவது செல்போன்கள் தான்.
சிறியவர் முதல் பெரியவர் வரை வகை வகையாக செல்போன் பாவனையாளர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
இருப்பதை பாவிப்பர் ஒருரகம் என்றால் புதிதாக எந்த செல்போன் வந்தாலும் அதை வாங்கியே தீருவேன் என்ற மிதப்பில் சிலர். அப்படிபட்டவர்களையும் ஆடிபோக வைக்கும் வகையில் இதோ வருகிறது ஐபோன் 15,
இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் விலையை முன்னரே அறிவித்து விட்டார்கள். எப்படியுமே ஐபோன் என்றால் விலையுயர்ந்ததுதானே!
ஐபோன் விலை
புத்தம் புதிய iPhone 15 ULTRA ஆனது 2023 ஆம் ஆண்டில் USB-C மற்றும் இரண்டு முன்பக்க கேமராக்களுடன் இந்த சமீபத்திய அறிக்கையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 2023 இல் ஒரு புதிய வடிவமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களிடம் iPhone 15 Ultra, iPhone 15 Pro க்கான கசிவுகள் மற்றும் அறிக்கைகள் உள்ளன.
இந்நிலையில் ஐபோன் 15 சீரிஸின் விலை வெளியாகியுள்ளது. இது ஐபோன் 15 அல்ட்ரா மாடல் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.
ஐபோன் வரிசையிலேயே இந்த போன்தான் டாப் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செல்போனின் விலை இந்திய மதிப்பு படி ரூ.1,43,000 இருக்கும். இந்த செல்போன் விலையைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.