Apple iPhone 14 Plus வெறும் ரூ.30,999 மட்டுமே!
ஒன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்டில் Apple iPhone 14 Plusயை தள்ளுபடி விலையில் ரூ.30,999க்கு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
தனது பயனர்களுக்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களுடன் ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் Apple iPhone 15 Plus அறிமுகமானது, இதனை தொடர்ந்து Apple iPhone 14 Plusன் விலை 10,000 ரூபாய் குறைக்கப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்தும் போது இந்திய ரூபாய் மதிப்பின் படி, ரூ.89,900க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது iPhone 15 Plusன் வரவால் ரூ.10,000 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஒன்லைன் வர்த்தக தளங்களும் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை அறிவிக்கின்றன.
அந்த வகையில் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே-யில் iPhone 14 Plusக்கு வரவேற்பு அதிகம் இருந்தது.
இதனை தொடர்ந்து வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பிக் பில்லியன் டே முடிவடைந்தாலும், iPhone 14 Plusக்கான மவுசு குறையவில்லை, இந்நிலையில் ரூ.36,000 தள்ளுபடியில் ரூ.30,999க்கு வாங்க முடியும். பிளிப்கார்டில் 12,901 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு, iPhone 14 Plusன் விலை ரூ.66,999 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1500 தள்ளுபடியும், பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து மாற்றினால் கூடுதலாக ரூ.34,500 தள்ளுபடியும் பெறலாம்.
முடிவில் iPhone 14 Plusயை ரூ.30,999க்கு வாங்கலாம், Blue, Purple, Midnight, Starlight மற்றும் Red
என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.