2026 இல் பணமும், வெற்றியும் குவியணுமா? இன்றைய தினத்தில் இதை மட்டும் பண்னீடுங்க
எண் கணித சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறந்த திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எண்களால் ஒருவரை வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் முடியும்.அது போல் பாதாளத்தில் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு எண்கணித சாஸ்திரத்தின் கணிப்பின் அடிப்படையில் இந்த புத்தாண்டு சிறப்பான பலன்களையும் செல்வ செழிப்பையும் தரவேண்டும் என்றால், பிறப்பு திகதியின் அடிப்படையில் இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளான இன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி செயினை வாங்கி அணிவதன் மூலம், தெய்வீக ஆற்றல் பெருகுவதுடன் இந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பு பெருகும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் படுக்கைக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைப்பதன் மூலம், 2025-ல் சந்தித்த உணர்ச்சிரீதியான துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டில் சாதக பலன்கள் கூடி வரும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் மதியத்திற்கு மஞ்சள் நிற உணவுப் பொருட்களை தானம் செய்வதன் மூலம் குருபகவானின் ஆசியால் இந்த ஆண்டு முழுவதும் பொருளாதார ரீதியில் உச்ச பலனை அனுவவிப்பார்கள்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் தங்களின் பணம் வைக்கும் பர்ஸை மாற்றுவதால் இந்த ஆண்டு முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இல்லாமல் செழிப்பான வாழ்க்கையை ஈர்ப்பார்கள்.

எண் 5
5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு பேப்பரில் தங்களின் ஆசையை எழுதுவதன் மூலம், புதன் பகவனானி ஆசியால் இந்த ஆண்டு இறுதிக்கும் இவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகியதிகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனைச் செயல்படுத்த உங்களுக்கு பிடித்த விடயத்தை செய்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதால் இந்த ஆண்டு முழுக்க மகிழ்சி பெருகும்.
எண் 7
7, 16, 25 ஆகியதிகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு விளக்கை ஏற்றி, அதன் முன் அமைதியாக அமர்வதன் மூலம், கேது ஆற்றல் பெருகி இந்த ஆண்டு முழுவதும் மன அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

எண் 8
8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கடுகு எண்ணெயில் தங்களின் நிழலை பார்த்து, அதை சனி பகவானுக்கு படைப்பதன் மூலம், சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட வாய்ப்பு காணப்படுகின்றது.
எண் 9
9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு புத்தாண்டின் முதல் நாளில் உடற்பயிற்சி செய்வதால், 2026-ல் செவ்வாயால் பல நன்மைகளைப் பெற முடியும். இந்த ஆண்டு முழுக்க உடல் பலமும் சீராக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |