20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா?
நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்களின் 20ஆம் ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடும் வகையில், கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
அதனை தொடந்து, இந்தக் கொண்டாட்டத்தின்போது சூர்யா அணிந்திருந்த ஸ்காட்லாந்து பாரம்பரிய உடையும், அவர்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகளும் கூட இணையத்தில் கவனம் ஈர்த்தது.

பாரம்பரிய உடையின் பின்னணி என்ன?
சூர்யா அணிந்திருந்த ஆடையின் பெயர் கில்ட் (Kilt). இது ஸ்காட்லாந்து ஆண்களின் பாரம்பரிய உடையாகும். பொதுவாகக் கட்டம் போட்ட வடிவில் காணப்படும் இந்த ஆடை, அந்நாட்டு கலாச்சாரம் மற்றும் குடும்ப வம்சாவளியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
கில்ட் ஆடையில் பாக்கெட்டுகள் இல்லாததால், சிறிய பொருட்களை வைக்க இடுப்பில் ‘ஸ்போரான்’ (Sporran) எனப்படும் பையை அணிவது வழக்கம். திருமணம், திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளில் இந்த ஆடை அணியப்படுகிறது.

மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் சூர்யா உள்ளிட்டோர் கயிறு இழுத்தல், கனமான பொருட்களைத் தூக்கி எறிதல் போன்ற ஸ்காட்லாந்தின் பாரம்பரிய விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர்.
பண்டைய காலத்தில் வலிமையான வீரர்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டிகள், பின்னர் குடும்பத்தினரும் உறவினர்களும் ஒன்றுகூடி மகிழும் பாரம்பரிய நிகழ்வுகளாக மாறின.

தங்களின் 20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தை ஆடம்பரமாக மட்டுமன்றி, குடும்பத்தினரிடையே ஒற்றுமையையும் நெருக்கத்தையும் வளர்க்கும் நிகழ்வாக மாற்றும் நோக்கில் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் இந்தப் பாரம்பரிய உடையையும் விளையாட்டுகளையும் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிமை குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |