16 வயதில் திருமணம்.. 24ல் விதவை! சேலையுடன் இந்தியாவின் முதல் பெண் விமானி
16 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து 24 வயதில் இரண்டு பிள்ளைகளுடன் கணவனை இழந்த சார்லா தாக்ரால் (Sarla Thakral) பற்றிய சுவாரசியமான தகவல்களையே நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
இந்தியாவில் விமானம் செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட முதல் பெண்மணியாக சார்லா கருதப்படுகின்றார்.
1914 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சார்லா 1936 ஆம் ஆண்டு தனது 21 ஆம் வயதில் விமானி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டார். அந்தக் காலப்பகுதியானது விமானத்தில் பயணம் செய்வது ஆச்சரியத்திற்குரியகாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்லா முதல் தடவையாக விமானத்தில் பயணித்த போது திருமணம் முடித்து இருந்தார் என்பது மட்டுமல்லாமல் நான்கு வயதான சிறுமிக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Instagram
முதல் தடவையாக விமானத்தில் விமானியாக பயணித்த போது சேலை அணிந்து சார்லா கடமையில் ஈடுபட்டிருந்தார். விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் அந்தக் காலப்பகுதியில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னணியிலும் பெண் ஒருவர் இருக்கின்றார் என்பது போன்று சார்லாவின் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர். அவரின் கணவர் மற்றும் கணவரின் தந்தை ஆகியோர் அவரது வெற்றியின் பின்னணியில் இருந்தவர்கள் ஆவர்.
சார்லாவின் கணவர் ஷர்மாவின் குடும்பத்தில் ஒன்பது பேர் விமானிகள் அவரது இந்த குடும்பப் பின்னணி சார்லா விமானி ஆவதற்கு அல்லது விமானியாகும் கனவை பூர்த்தி செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.
சர்லாவின் கணவர் ஷர்மாவும் ஒரு வெற்றிகரமான விமானி ஆவார், ஷர்மா எயார் மேல் விமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்ட முதலாவது இந்தியர் என்பதுடன் கராச்சி - லாகூர் நகரங்களுக்கிடையில் அவர் விமானத்தை செலுத்தி இருந்தார்.
image - thebetterindia
எனினும் ஒவ்வொரு வெற்றி கதையின் பின்னாலும் காணப்படும் சவால்கள் சர்லாவின் வாழ்க்கையிலும் காணப்பட்டது. 1939 ஆம் ஆண்டு இடம் பெற்ற திடீர் விமான விபத்தில் தனது கணவரை இழந்தார் மிக இள வயதில் அதாவது 24 ஆம் வயதிலேயே சார்லா கணவனை இழந்துவிட்டார்.
ஆயிரம் மணித்தியாலங்கள் வானில் பறந்து A தர சான்றிதழை பெற்றுக் கொண்ட சரளா B தர சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சி எடுத்து வந்தார்.
இந்த B தர சான்றிதழ் இருந்தால் மட்டுமே வர்த்தக விமானங்களை செலுத்த முடியும்.
எனினும் இந்த கனவை நினைவாக்கிக் கொள்வதில் சவால்கள் ஏற்பட்டன குறிப்பாக இரண்டாம் உலகப்போர் காரணமாக சரளா காத்திருக்க நேரிட்டது போர் ஆரம்பித்த காரணத்தினால் சார்லா, லாகூருக்கு திரும்பி மாயோ கலைக்கல்லூரியின் டிப்ளமோ கற்கை நெறி ஒன்றை பூர்த்தி செய்தார்.
Source: Flickr/MR38
ஆர்ய சமூகத்தை பின்பற்றிய சார்லா இரண்டாம் திருமணம் முடித்துக் கொண்டார். பீ.பீ. தாக்ரால் என்பவரை அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஆபரண உற்பத்தி,சேலை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் கற்று தேர்ந்து பல வெற்றிகளை படைத்துள்ளார்.
பெண்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த சார்லா 2009ம் ஆண்டு மார்ச் மாதம் இறைவனடி சேர்ந்தார்.