இலங்கையில் பரவும் புதிய வைரஸ் தொற்று - இதுவரை 14 பேர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்த நேரத்தில், மீண்டும் இந்தியாவில் கொரொனா தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது.
தமிழகத்திலும் அதிகரிக்கும் நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கொரொனா வைரஸ் அடுத்து புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இவை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை பகுதியில் அண்மை காலமாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்த வைரஸ் தொற்றானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். இதனால், கடந்த ஏப்ரல் மாதம் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் மாதத்தின் இதுவரையான காலம் வரை அந்த தொகையானது 103ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள்
இந்த வைரஸ் தொற்று சாதாரண ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில், அது சாதாரணமாக காய்ச்சல், தடிமல், இருமல், உடல்வலி, தொண்டை வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.