1 ரூபா கூட செலவில்லாமல் முகத்தை பளபளபாக்க வேண்டுமா? தினம் இதை செய்தால் போதும்
பண்டிகை காலங்களில் புத்தாடை அணியும் போது மகம் எப்பொதம் அழகாக இருக்க வெண்டம் என அனைவரும் நினைப்பார். இதற்கு பார்லா சென்று அழகுபடுத்த நினைப்பார்கள்.
இது முகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பல ஆயிரம் செலவுகளும் அதிகரிக்கும். பிரகாசமான ஆரோக்கியமான சருமம் தான் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும்.
இந்த செலவுகளை குறைத்த வீட்டில் நமக்கு தெரிந்த அழகு குறிப்புக்களை செய்து முகத்தை எப்படி அழகுபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமம் பளபளக்க
உளுந்து பேஸ் பேக்: உளுந்து நமது சரும பராமரிப்பிற்கு மிகவும் உகந்த பொருளாகும். இந்த உளுந்தை பாலில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
ஈரப்பதம்: சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். பண்டிகைக் காலங்களில் வானிலை மாற்றங்கள், வெப்பம் போன்றவை உடலில் வெப்பசமநிலையை சீர்குலைக்கும்.
இதனால் சருமம் வறண்ட நிலையை அடையும். இதனை தவிர்க்க நன்றாக தண்ணீர் குடிப்பதுடன் இரவில் உறங்கும் முன் முகத்தை கழுவிவிட்டு உறங்குவது நன்மை தரும்.
பொதுவாக ஹைலூரோனிக் அமிலம் அல்லது கிளிசரின் இருக்கும் தயாரிப்புகளை சருமத்திற்கு வாங்குவது நல்லது. இந்த பொருள்கள் உள்ள மாய்ஸ்சரைசர் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
பேஸ் பேக்: எப்போதும் எதாவது பண்டிகை வரும் போது சில நாட்களுக்கு முன்பே சருமத்தை ஈரப்பதமாக்கும் பேக் பேக் பயன்படுத்துங்கள். இதற்காக வைட்டமின் சி, கற்றாழை அல்லது தேன் ஆகிய பொருட்கள் கலந்த பேஸ் பேக் உடனடி பளபளப்பை வழங்கும்.
சருமத்தை புத்துணர்ச்சியோடு வைக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது பேஸ் பேக் போடுவது நல்லது.
சீரம்: தோல் பராமரிப்புக்கு சீரம் நன்றாக பலனளிக்கும். சில தோல் பிரச்சனைகளை திறம்பட கையாள சீரம் நல்ல தேர்வாகும். இதை உபயோகிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், மந்தமான தன்மை அல்லது பள்ளங்கள் மாதிரியான சீரற்ற அமைப்பு சரி செய்யும்.
இதில் வைட்டமின் சி அல்லது நியாசினமைடு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்க வேண்டும். இது முகத்தை பிரகாசமாக வைத்திருக்கவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |