இந்தியா - நியூசிலாந்தின் முதல் டெஸ்ட் போட்டி - பந்துவீசிய பயிற்சியாளர் டிராவிட்; வைரல் வீடியோ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நவம்பர் 25 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அணியை தேர்ந்தெடுப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால், மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இறங்க உள்ளனர்.
மேலும், கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்கள் டிராவிட் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, ராகுல் டிராவிட் வீரர்களுக்கு சுழற்பந்து வீசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு பந்துவீசுவது தொடர்பாக சில நுணுக்கங்களையும், அறிவுரைகளையும் டிராவிட் வழங்கினார்.
???? ?????-??? ???-???? ??????? ?
— BCCI (@BCCI) November 24, 2021
? That moment when #TeamIndia Head Coach Rahul Dravid rolled his arm over in the nets. ? ?#INDvNZ @Paytm pic.twitter.com/97YzcKJBq3