முத்த மழை பாடலுக்கு ரோபோ ஷங்கர் மகள் செய்த ரீல்ஸ்... வைரலாகும் காணொளி!
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் தக் லைஃப் திரைப்பட முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் செய்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ரோபோ சங்கர்- இந்திரஜா
தொலைக்காட்சி நிகழ்சிகளில் இருந்து பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர், அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் ஊடாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
அதனை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்தார்.
அதன் பின்னர் அவருடைய சொந்த மாமன் கார்த்திக்கை இந்திரஜா திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.
இதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்கொண்டனர்.இந்த தம்பதியினருக்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது.
திருமணத்தின் பின்னரும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்திரஜா தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்கு தனது பரத கலையின் முக பாவனைகளை கொடுத்து ரீல்ஸ் செய்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |