மகனை முருகனாக மாற்றிய இந்திரஜா- யாரு மாதிரி இருக்காங்க பாருங்க
இந்திரஜா ரோபோ சங்கர் மகனின் முகத்தை காட்டியப்படி வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
குழந்தை முகத்தை காட்டிய படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா மகனுக்கு கமல்ஹாசன் வைத்த பெயரை நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் மகன்- நட்சத்திரன் முருகன் போன்று அலங்காரம் செய்யப்பட்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “குழந்தை அப்பா போலவே இருக்கிறது..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |