அமெரிக்க ஸ்டோரில் திருடியதாக பிடிப்பட்ட இந்தியப் பெண்... வைரலாகும் காணொளி!
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கையும் களவுமாகத் திருடும்போது பிடிபட்டதாக, போலீசார் வந்தபோது, தவறை ஒப்புக்கொண்டு, கொஞ்சும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இந்தியப் பெண் ஒருவர், திருடும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் இணையத்தளவாசிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளம் பெண் பொருட்களை ஷாப்பிங் செய்துவிட்டு, பில்லிங் கவுண்டரில் பல பொருட்களை ஸ்கேன் செய்ய தவறிவிட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த பெண் வேண்டுமென்றே சில பொருட்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பது கேமராவில் தெளிவாகத் தெரிந்தது.
பணம் கொடுக்காமல் அவர் வெளியேற முயன்றபோது, ஒரு பாதுகாவலர் அவரைத் தடுத்து, அவருடைய பையை சோதனையிட்டுள்ளார்.

அதன் போது, பணம் செலுத்தப்படாத பல பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடை மேனேஜர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த வீடியோவில், கைவிலங்கு போடச் சொல்லும் அமெரிக்க அதிகாரிகளிடம் குறித்த பெண் அழுது மன்றாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |