இந்தியாவில் எந்த மாநிலம் பெண்கள் அதிகம் மது அருந்துவார்கள்? பலரும் அறியாத தகவல்
பொதுவாக உலகில் உள்ள பல பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பொறுத்து இப்படியான பழக்கங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதிக மது அருந்தும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Gen X மற்றும் Gen Z தலைமுறையினரில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். மாறாக மது எனக் கூறும் பொழுது ஆண்கள் தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் மது அருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் மது அருந்துகிறார்கள்.
பிராந்திய கலாச்சாரம், சமூக அங்கீகரிப்பு, பழங்குடி மரபுகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களினால் மது பழக்கம் அதிகமாகி வருகிறது.
குறிப்பிட்ட சில பழங்குடியினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில், உள்ளூர் மதுபானங்கள் அன்றாட வாழ்க்கையிலும் சமூக சடங்குகளிலும் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள்.
அந்த வகையில், இந்தியாவில் பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்கள் என்னென்ன? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. அருணாச்சலப் பிரதேசம்
அதிகம் மது அருந்தும் பெண்களை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் அருணாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 24.2% பெண்கள் மது பழக்கம் கொண்டவர்களாக பார்க்கப்படுகிறார்கள். விருந்தினர்களுக்கு "அபோங்" எனப்படும் அரிசி பீர் வழங்குவது இவர்களின் வழக்கமாக உள்ளது.
2. சிக்கிம்
பெண்கள் மது அருந்துவதில் சிக்கிம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட 16.2% பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள், அங்கு மது பானம் உற்பத்திகளும் நடக்கின்றன. “சாங்” எனப்படும் பானம் ஒரு புளிக்கவைக்கப்பட்ட தினை பீராகும். இந்த சாங் பாரம்பரியமாக வீட்டில் காய்ச்சப்பட்டு, பண்டிகைகள், சமூகக் கூட்டங்கள் மற்றும் மத விழாக்களின் போது பரிமாற்றப்படுகிறது.
3. அசாம்
அசாமில், 7.3% பெண்கள் மது பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். அசாமின் பழங்குடி சமூகங்கள் நீண்ட காலமாக மது தயாரிப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். விஸ்கி இங்கு பிரபலமான மதுபானமாக பார்க்கப்படுகிறது. அசாமின் பழங்குடி மக்களிடையே நிலவும் கலாச்சார நடைமுறைகளே இதற்கான காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |