ரயில் நிலையத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ரோபோ - வைரல் காணொளி
விசாகப்படினம் ரயில் நிலையத்தில் குற்றவாளிகளை இனம்காண ஒரு ரோபோ காவல் துறை மூலம் நியமிக்கபட்டுள்ளது.
குற்றவாளிகளை இனம் காணும் ரோபோ
விசாகப்படினம் ரயில் நிலையத்தில் மனித உருவத்திலான ஒரு ரோபோ குற்றவாளிகளை இனம் காண நியமிக்கப்பட்டுள்ள விடயம் தற்போது மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. இந்த ரயில்வே பகுதியில் இது முதல் முறையான செயலாகும்.
இந்த ரோபோவின் பெயர் ஏஎஸ்சி அர்ஜுன் என்பதாகும். இந்த ரோபோவை ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் விடப்பட்டுள்ளது.

இந்த ரோபோவின் மூலம் 360 டிகிரி கமாராக்கள் மூலம் ரயில்வேயில் இனங்காணப்படும் தப்புக்களை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.
இது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால் கூட அதை இந்த ரோபோவிடமே கேட்டு தெரிந்து கொள்ள முடியும். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியிலும் இந்த ரோபோவுடன் பேசலாம்.
மேலும், தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறிந்தால் அவர்களின் புகைப்படத்துடன் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த ரோபோ செய்தி அனுப்பி விடும்.

அப்படி தான் இரண்டு குற்றவாளிகளை இந்த ரோபோ கண்டுபிடித்து கொடுத்துள்ளது. ரோபோவின் எச்சரிக்கையை அடுத்து விரைவாக பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கையும் களவமாக பிடித்துள்ளனர்.
மேலும் அந்த குற்றவாளிகளக்கு காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதுடன் இருவரும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |