பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் மர்ம கிராமம்- எங்குள்ளது தெரியுமா?
பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வீட்டை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளும் விடயமாக இருந்து வருகிறது.
உதாரணமாக அநேகமான வீடுகளில் நாய், பூனை மற்றும் சில வினோதமான குட்டி மிருகங்களை செல்லபிராணிகளாக வளர்ப்பார்கள்.
மாறாக இந்தியா - மகாராஷ்டிராவில் ஒரு மூலையில் வழக்கமாக இல்லாத அதிசயங்களுடன் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு செல்லப்பிராணிகள் கூட இல்லையாம். அதற்குப் பதிலாக ஆபத்தான நாகப்பாம்புகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்களாம். இதனை கேட்டு பலரும் வாயடைத்து போயுள்ளனர்.
ஷெட்பால் (Shetphal )என அழைக்கப்படும் அந்த கிராமத்தில் ஆபத்தான ஊர்வன விலங்குகள் உள்ளன. அத்துடன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நாகபாம்புகள் தான் வரவேற்கும் வேலையை செய்யுமாம்.
மேலும் புனித சின்னங்களாகவும் இன்றும் மதிக்கப்படுகின்ற கலாச்சாரமாக இந்த செயல் பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாம்புகளை வளர்க்கும் கிராமம்
1. வழக்கம் போல் நாய்கள் குரைப்பதையோ அல்லது பூனைகள் சத்தமிடுவதையோ இந்த கிராமத்தில் கேட்க முடியாது. மாறாக பாம்புகளை எங்கும் பார்க்கலாம். இந்த கிராமம் ஒரு காரணத்திற்காக "இந்தியாவின் பாம்பு கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
2. அந்த கிராமத்தில் வாழும் குழந்தைகள் பாம்புகளோடு தான் விளையாடுகிறார்கள். விளையாடும் சமயத்தில் பாம்புகள் தீண்டினால் அவர்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படாது. இதனால் இந்த இடத்தை சுற்றி ஏதாவொரு மர்மம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
3. இந்து மதக் கடவுளான சிவபெருமான் கழுத்தில் நாகப்பாம்பு இருந்த காரணத்தினால் அந்த கிராமத்தில் வாழும் நாகபாம்புகளை வழிபடுகிறார்கள். மாறாக கழுத்தில் பாம்பு இல்லாத சிவபெருமானை ஒருபோதும் பார்க்க முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
4. ஷெட்பால் (Shetphal) கிராமத்தில் வாழ்கின்ற மக்களை பொறுத்தவரையில் பாம்புகள் என்பது விலங்குகள் அல்ல. அவை வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் தகுதியான தெய்வங்களாக பார்க்கப்படுகின்றது. இந்த பாம்புகளுக்கான தனிக் கோயில்களும் கிராமத்தில் உள்ளன.
5. விஷ உயிரினங்களின் அருகாமையில் கிராம மக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் வந்தது இல்லை. ஆனால் வெளியிலிருந்து கிராமத்திற்கு புதிதாக செல்பவர்களை Shetphal கிராம மக்கள் எச்சரித்து தான் வருகிறார்களாம்.
6. பாம்புகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் விடயம் உலகம் முழுவதும் தெரிந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அந்த இடத்திற்கு செல்வதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனாலும் பயணிகளுக்கு பாம்புகளிடமிருந்து பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அங்கு செல்வதற்கு முறையான ஒரு நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |