உள்நாட்டுப் அப்பளத்தை ஏசியன் நாச்சோஸ் ஆக மாற்றிய மலேசிய ஹோட்டல்: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
மலேசிய ஹோட்டல் ஒன்றில் பிரபலமான உணவை இந்திய உணவு என பதிவிட்டு இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
பிரபல உணவாக மாறிய அப்பளம்
மலேசிய உணவகமொன்று இந்தியர்கள் ஸ்பெஷல் உணவான அப்பளத்தை ஏசியன் நாச்சோஸ் என்ற பெயரில் விற்றுவருகின்றனர்.
இந்த ஏசியன் நாச்சோஸின் விலையானது 25 மலேசிய ரிங்கிட்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 500 ரூபாய் ஆகும்.
அந்த உணவகத்திற்கு உணவருந்த சென்ற சமந்தா என்பவர் இந்த உணவை படம் எடுத்து பகிர்ந்து இங்கு பெரிய சமையல் குற்றம் நடந்துள்ளது என தெரிவித்திருக்கிறார்.
அவர் பகிர்ந்த இந்த பதிவு இதுவரை ட்விட்டரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 9 ஆயிரம் லைக்குகளை பெற்று ட்ரெண்டாகி வருகிறது.
A culinary crime has been committed pic.twitter.com/owYQoILSnk
— samantha (@NaanSamantha) January 22, 2023
அவரின் இந்த பதிவைப் பார்த்த இந்தியர்கள் கலாய்த்து வருகிறார்கள்.