குழந்தை பெற்று வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட பெண்... ராணுவவீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! தீயாய் பரவும் காட்சி
சமீபத்தில் ராணுவ வீரர்கள் குறித்து நெகிழ வைக்கும் செயல் அதிகமாகவே நம்மை வந்தடைகின்றது. எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பது மட்டுமன்றி உள்நாட்டு மக்களையும் காப்பது இராணுவ வீரர்களின் கடமை என்ற வகையில் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த இளம்பெண்ணிற்கு செய்த உதவி காணொளியாக பரவி வருகின்றது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும்பனி பொழிந்து வருவதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் கடும்பனி தொடர்ந்து இருப்பதால் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் கடும் பனியால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் இளம்பெண் ஒருவர் தவித்துக் கொண்டு இருப்பது குறித்த தகவல் ராணுவத்திற்கு கிடைத்தது. இதனை அடுத்து அந்த மருத்துவமனைக்கு சென்ற ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை ஆறு கிலோமீட்டர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கியபடி அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இளம்பெண்ணை தூக்கி செல்லும் போது அந்தப் பெண்ணின் மேல் பனிபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குடை பிடித்துக் கொண்டே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#IndianArmy soldiers carried the wife and newborn of Farooq Khasana of Dardpura, Lolab, for 6km in knee-deep snow & safely rescued them to their home. #Kashmir @adgpi @NorthernComd_IA @suryacommand @Whiteknight_IA pic.twitter.com/NAXPQYHMIn
— Chinar Corps? - Indian Army (@ChinarcorpsIA) January 23, 2021