திருமணம் முடிந்ததும் மனைவி சொன்ன ஒரு வார்த்தை: உடனடியாக விவாகரத்து செய்த கணவன்
இந்தியாவில் திருமண நாளன்று தனக்கு மாதவிடாய் என கூறியதும் கணவன் உடனடியாக விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த தம்பதிக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்தது, தாலி கட்டியவுடன் பிரார்த்தனைக்காக கோவிலுக்கு செல்ல நினைத்தனர். அப்போது தனக்கு மாதவிடாய் இருப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மூத்த சகோதரர் ஏற்கனவே வீட்டை கவனித்து வருவதால், குடும்ப செலவினங்களுக்கு தான் பணம் கொடுக்க கூடாது என மனைவி கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வீட்டில் உடனே ஏசி இயந்திரம் பொருத்த வேண்டும் எனவும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என தன்னிடம் சண்டையிட்டதால் விவாகரத்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.