தங்கை என்று கூட பார்க்காமல் செய்த கொடூர செயல்... தனியாக இருந்த போது அண்ணன் நிகழ்த்திய கொடூரம்
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சொந்த தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் பணம் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினரின் ஒரே மகள் லோகப்பிரியா(20). இவர் அரசு கலைக்கலூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மின்சார வாரியத்தில் கணக்கீட்டு அலுவலராக பணியாற்றி வந்த பழனியப்பன் கடந்த 2013ம் ஆண்டு இறந்ததால், அவரது மனைவி சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளது.
சிவகாமி எப்பொழுதும் போல் நேற்று முன்தினமும் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், வீட்டில் லோகப்பிரியா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் அவர் அணிந்திருந்த 9 கிராம் நகை மற்றும் வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனம் எல்லாம் கொள்ளை போயியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லோகப்பிரியாவின் பெரியப்பா மகன் சுரேஷ் இவ்வாறு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பழனியப்பன் இறந்த பின்பு சிவகாமி வீட்டிற்கு அவ்வப்போது சிறு சிறு உதவிகளை செய்து வந்த சுரேஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
நிரந்தர வேலையில்லாமல் கடன் வாங்கிக்கொண்டு செலவு செய்தவருக்கு திடீரென நெருக்கடி ஏற்படவே, தனது சித்தி வீட்டினை நோட்டமிடுவதற்கு, அவ்வப்போது உதவி செய்வது போன்று வந்ததும், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தங்யையை கொலை செய்துவிட்டு அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
