51 வயதான மனைவியை கொலை செய்த 28 வயது கணவன்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கேரளாவில் 51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து அவரை கொலை செய்த சம்பவத்தில், இளைஞன் அவரை சொத்துக்காகவே திருமணம் செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஷஹாகுமாரிக்கு 51 வயதும், அருணுக்கு 28 வயது என்பதால், இவர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதன் பின் நண்பர்களின் கிண்டல் போன்றவைகளால், அருண் மனைவியை கொலை செய்தார்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அருண் அப்பெண்ணை, சொத்துக்காகவே காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷஹாகுமாரி (51) காரக்கோணம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நல்ல வசதி இருந்தும் திருமணம் செய்யாமலே வாழ்ந்துவந்தார்.