இந்தியாவில் வேகமெடுக்கும் உருமாறிய கொரோன வைரஸ்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உருமாறிய வீரியம் அதிகம் கொண்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவி வருகிறது.
கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பலருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நேற்று வரை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 58 ஆக இருந்தது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நேற்று நாளில் 20 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் மேலும் 13 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.