திருமணமான 3 மாதத்தில் இந்திரஜா தம்பதிகள் கூறிய குட்நியூஸ்... வைரலாகும் புகைப்படம்
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நல்ல செய்தி ஒன்றினை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்திரஜா சங்கர்
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உறவினர் கார்த்திக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 24ம் தேதி மதுரையில் நடைபெற்றது.
தற்போது திருமணமாகி 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் இருவரும் பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தொாடர்ச்சியாக 4 ஆண்டுகள் நடந்த நடந்த நிலையில், கடந்த ஆண்டு சில காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் சீசன் 5 வரும் 29ம் தேதி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இந்திரஜா தம்பதிகளும் கலந்து கொள்ள இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |