சோறு வடித்த தண்ணீரை ஒதுக்கி வைப்பவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யமாட்டீங்க
சாதம் வடித்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் சாதம் என்பது வடித்து சாப்பிடுவதில்லை. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு வெறும் 10 நிமிடத்தில் குக்கரில் வைத்து முடித்துவிடுகின்றனர்.
ஆனால் குக்கரில் நாம் வைத்து சாப்பிடும் சாதம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வடித்த சாதம் சாப்பிடுவது மட்டுமின்றி அதில் உள்ள கஞ்சியிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் இருக்கும். இயற்கை நிவாரணியாகவும் இருக்கின்றது.
நமது முன்னோர்கள் காலை எழுந்ததும் சோறு வடித்த தண்ணீரை தான் நீராகாரமாக பருகி வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் செயற்கை தயாரிப்பான ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று தான் குழந்தைகள் பருகி வருகின்றனர்.
சாதம் வடித்த தண்ணீரை பருகுவதால் ்என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சாதம் வடித்த தண்ணீரின் நன்மைகள்
சாதம் வடித்த கஞ்சியில் அதிகமான கார்போஹைட்ரேட் இருப்பதால் ஆற்றலை அதிகரிக்கின்றது. சோர்வு ஏற்படுவதை தடுப்பதுடன் உடலை குளிர்ச்சியாகவும் வைக்கின்றது.
சாதம் வடித்த தண்ணீர் செரிமான கோளாறுகளை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறை நீக்கவதுடன், குடல் இயக்கத்தையும் அதிகரிக்கச் செய்து குடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது.
உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், உடல்நிலை சரியில்லாத தருணங்கள், வெயில் காலங்களில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு இந்த பானத்தை பருகலாம்.
சாதம் வடித்த கஞ்சியில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளதால் இதை குடித்து வந்தால் சருமத்தில் எரிச்சல், வீக்கத்தை போக்குவதுடன், முகப்பருக்களையும் குறைக்கின்றது.
இந்த தண்ணீரில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், இது சோடிய அளவைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகின்றது.
குறைவான கலோரிகள் கொண்ட இந்த தண்ணீரை பருவதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதுடன், பசியும் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் உடையைக் குறைக்கவும் உதவுகின்றது.
நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீர், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைகின்றது.
நீர்க்கடுப்பு பிரச்சனை, அடி வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வெள்ளை படுதல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |