முகத்தை பளபளக்க வைக்க தக்காளி போதும் - இப்படி போடுங்க
சருமம் வறண்டு இருந்தால் அதற்கு இயற்கை பொருட்கள் பயன்படுத்துவது நல்லது. சிலருக்கு வெளியெ செல்லுதல் வெயிலில் சுற்றும் காரணமாக முகம் வறண்டு, கைகள் மற்றும் கால்கள் வெண்மையாகி, உதடுகள் வெடிக்கத் தொடங்குகின்றன.
சிலர் இதை போக்க இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அவை தற்காலிகமாகவே உங்களுக்கு கலனை தரும்.
தக்காளி ஃபேஸ் பேக் சருமத்தை பொலிவாக்கவும், கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் துளைகளைக் குறைக்கவும் உதவும் ஒரு சிறந்த இயற்கைப் பொருளாகும்.
இதற்கு வீட்டிலேயே சிறந்த வழி இருக்கிறது அது தான் தக்காளி இதை முறையாக மகத்திற்கு போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும். இதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தக்காளி பேஸ் பெக்
முகத்திற்கு தக்காளி பேஷ் பெக் செய்ய முதலில் தக்காளி சாறு இரண்டு ஸ்பூன் அதனுடன் தேன் இரண்டு ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை முகத்தில் பொட்டு 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை செய்தால் போதும்.
அடுத்து இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, இதனுடன் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பெக் போல தயாரிக்கவும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இந்த பேக் சிறந்தது.

அடுத்து 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இது நன்றாக காயந்த பின்னர் சாதாரண நீர் கொண்டு முகத்தை கழுவினால் போதும்.
பின்னர் தக்காளி சாறுடன் கொஞ்சமாக சக்கரை சேர்த்து அதை நம் முகத்தில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பெலிவு பெறும்.
பின்னர் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறுடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் லேசாக மசாஜ் செய்து தடவ வேண்டும். இது நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டால் முகம் பளிச்சிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |