வீட்டில் பச்சரிசியும் பருப்பும் இருக்கா? அப்போ காலை உணவு இப்படி செய்ங்க!
வீட்டில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமாகும். இந்த காலை உணவை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். உங்களது வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த அரிசி உப்பு மா செய்து பாருங்கள்.
சுவை அட்டகாசமாக இருக்கும் ஆரோக்கயமான உணவாகவும் இருக்கும். இன்று கொடுக்கப்பட்டுள்ள உணவு ரெசிபி செய்வதற்கு வீட்டில் அரிசியும் பச்சரிசியும் இருந்தால் போதும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி -1 கப்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – 3 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் சிறிய அளவு
- பச்சை மிளகாய் – 2
- வத்தல் – 2
- வெங்காயம் 1 1
- கறிவேப்பிலை
- 2 கப் தண்ணீர்
- உப்பு
- தேங்காய் அரை மூடி துருவியது
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் கழுவி, நீரை வடிகட்டி உலர விட வேண்டும். பின்பு அவற்றை மிளகு, சீரகம் சேர்த்து, ரவா பதத்திற்கு ஒரு முறை லேசாக அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு தாளிக்க வேண்டும். இதில் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வத்தல் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி சுவைகேற்ப உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க ஆரம்பித்தும், பொடித்து வைத்துள்ள, அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, உப்புமாவை வைத்துவிட்டு பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |