தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம்.
நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும்.
அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்
இரவில் உறங்குவதற்கு முன்னர் தொப்புளில் 4 துளி தேங்காய் எண்ணெய் விட்டால் அது உடலில் பல நன்மைகளுக்கு வழி வகுக்கும்.
நமது உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளுக்கும் மையமாக காணப்படுவது இந்த தொப்புள் பகுதி தான். சுமார் எழுபதாயிரம் நரம்புகள் தொப்புள் பின்னால் இருக்கின்றன.
இதனால் தான் தொப்புளில் எண்ணெய் விடும் போது அது நமக்கு பயன் தருகின்றது. கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் போன்றவற்றில் பணிபுரிவோருக்கு கண்களில் வறட்சி ஏற்படுகின்றது.
உடலிலும் சூடு அதிகமாகி விடுகின்றது. இந்த சூட்டை தணிப்பதற்கு இந்த தேங்காய் எண்ணெய் தொப்புளில் இரவு உறங்கும் முன் சேர்க்கலாம். இதனால் கண் பார்வை கூர்மையாக இருக்கும்.
பாத வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். சீரான ரத்த ஓட்டம் நரம்பு வலி உறுப்புக்களின் ஆரோக்கியம் போன்றவற்றை இந்த எண்ணெய் விடுதல் சரி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |