இட்லி மாவு புளித்து விட்டதா? இனிமேல் வீசாதீங்க இதை எல்லாம் பண்ணுங்க
நாம் வீட்டில் அரைத்த தோசை மற்றும் இட்லி மாவி புளித்து விட்டால், அதை எப்படி சரி செய்து பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
புளித்த மா
வீட்டில் கட்டாயமாக தோசை இட்லி செய்வதற்கு மாவு அரைத்து வைத்திருப்போம். அப்படி அரைத்து வைத்திருக்கும் மாவு “சில நோரங்களில் நாம் மறந்து விடுகிறோம். இப்படி புளித்த மாவை வீசாமல் அதை வைத்து சுவையான உணவை செய்ய முடியும்.
புளித்த மாவில், வெங்காயம், கேரட், தேங்காய் துருவல், உப்பு , மிளகு சேர்த்து சின்ன போண்டாவாக பொறித்து எடுக்கலாம். புளித்த மாவை எண்ணெய் பிசுக்கு அதிகம் உள்ள பாத்திரம், டைல்ஸ், பாத்ரூம் தரையை நாம் சுத்தம் செய்யலாம்.
இதில் நல்ல பாக்டீரியா இருப்பதால் சுத்தப்படுத்த உதவும். ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில் நாம் இதை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து செடிக்கு ஊற்றலாம்.
மேலும் மாட்டிற்கு கழநீர் தண்ணீரில் சேர்த்து ஊற்றலாம். இதுபோல் குழாயில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்கலாம். ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஸ்கிரப் போல் முகத்தில் தேய்த்து நாம் முகம் கழுவலா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |