உடம்பெல்லாம் ஒரே வலியா? இடிச்ச நாட்டுக்கோழி சாறு சாப்பிடுங்க! வலிகள் பறந்தோடும்
கோழி என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள், அதுவும் நாட்டுக்கோழி என்றால் கேக்கவா வேண்டும்..
அதிலும் கிராமத்தில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது தான்.
முறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி.
சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் போதும். இப்படி பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் நாட்டுக்கோழியை வைத்து “இடிச்ச நாட்டுக்கோழி சாறு” தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
செய்முறை
இதற்கு முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து அதன் முடிகளை பறித்துவிட்டு நன்றாக மஞ்சள் தடவிக்கொள்ளவும்.
இதனை நெருப்பில் நன்றாக சுட்டு எடுத்துக்கொண்டு உரல் அல்லது அம்மியில் வைத்து நன்றாக தட்டவும்.
இந்த நய்ந்து போன இறைச்சி தான் அலாதி ருசி
கடாயை அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப நல்லெண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் சிறிது மிளகு, சீரகம் போட்டு, பட்டை மிளகாய் போட்டு வதக்க வேண்டும் 2 நிமிடத்திற்குப் பின், இஞ்சி, வெள்ளைப்பூண்டு இடித்து போட்டு வதக்கவும், இதனுடன் துண்டு துண்டாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் கோழியை சேர்த்து வதக்கி, சிறிதளவு மஞ்சள் பொடி, மல்லிப்பொடி சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்த பின்னர், தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் சுவையான இடிச்ச நாட்டுக்கோழி சாறு தயார்!!!