அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்களா? இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்கே
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் என்றால் அது ஐஸ் கிரீம் தான். ஐஸ்கிரீமிற்கு அடிமையாகாதவர்கள் எவரும் இல்லை.
ஆனால் சிலர் ஐஸ் கட்டி சாப்பிடும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இவ்வாறான பழக்கம் ஒரு நோய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவினை உட்கொண்டால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஐஸ் சாப்பிடுவதற்கான காரணம்
கோடை காலங்களில் ஐஸ் கிரீம் அதிகமாக பலரும் சாப்பிடுவார்கள். ஆனால் ஐஸ் கட்டியை சிலர் எந்தவொரு சீசனிலும் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இதற்கு காரணம் உடம்பில் ரத்த சோகை பிரச்சினை இருப்பது தான்.
உடம்பில் ரத்த சோகை பிரச்சினை உடம்பில் குறைய ஆரம்பித்தால், ஐஸ் கட்டி சாப்பிடுவதையும் குறைத்துவிடுவார்களாம். இரத்த சோகை இருப்பவர்கள் கோழி, முட்டை, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளல் வேண்டும்.