கணவர் எங்கே.... ஏன் அவர பத்தி பேசவே இல்ல! தொகுப்பாளினி பிரியங்கா கொடுத்த அதிரடி பதில்

Nivetha
Report this article
தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸிற்கு பின்னர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவருடைய ரசிகர்கள் எல்லோரும் பிரியங்காவிற்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள்.
அதற்கு பிரியங்கா எனக்கு ஆதரவாக சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. அதே போல் என்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள்.
இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி போயிருக்கும் நிலையில் உடனே பிரியங்கா ரசிகர்கள் எல்லோரும் பிக்பாஸ் வீட்டில் ஏன் பிரவீனை பற்றி பேசவில்லை.
பிரவீன் எங்கே? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பிரியங்கா, எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு வெளிவந்த வீடியோவிலும் பிரியங்கா பிரவீனை பற்றி கேட்டதற்கு அவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சம்.
அதுமட்டுமில்லாமல் அவர் கேமரா முன்பு அதிகமாக வர மாட்டார் என்று கூறியிருந்தார்.
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஒருவேளை இதனால்தான் பிரியங்கா, பிரவினை பற்றி பேசவில்லையோ? இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா? என்பதை பிரியங்காவின் அடுத்த வீடியோ வரும் வரை பொறுத்திருக்கலாம்.
