கோடையில் நீர்க்கடுப்பினால் அவதிப்படுகின்றீர்களா? தீர்வு இதோ
கோடை காலத்தில் நீர்க்கடுப்பினால் அவதிப்படுபவர்களுக்கான தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீர்ப்பாதை தொற்று
கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடம்பில் நீர்ச்சத்து குறைவதுடன், கருமக் கோளாறுகளும் ஏற்படும்.
சிறுநீர் பாதை தொற்று(நீர்க்கடுப்பு) பிரச்சனையும் ஏற்படும். உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்தமாக வைப்பதற்கு சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் நெப்ரான்கள் உள்ளன. இவை தேவையற்ற கழிவுகளை வடிகட்டி, குறித்த கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் வழியாக சிறுநீர்ப் பையில் சேர்ந்து, யூரித்ரா என்ற குழாய் மூலம் வெளியேறுகின்றது. இந்த அமைப்பையே சிறுநீர்ப்பாதை என்று அழைக்கிறோம்.
[BUCZMAE
எவ்வாறு தவிர்ப்பது?
சிறுநீர்ப்பாதையில் கிருமித்தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி மற்றும் சிரமம் ஏற்படும். இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டுவிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாதபோது, சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
சமீப நாட்களில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க, தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர், இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற திரவங்களை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |