21 அடி நீள கிரிக்கெட் பேட் கார்! நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய வைரல் காணொளி
ஹைதராபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம், வழக்கமான கார் வகைகளுக்கு அப்பாற்பட்டு கிரிக்டிகெட் மட்டை வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கார் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளி தற்போது இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுதா கார்கள் அருங்காட்சியகம் ( Sudha Cars Museum ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு ஆட்டோமொபைல் அருங்காட்சியகமாகும்.

இது தனது வித்தியாசமானது, கார் கண்டுபிடிப்புகளுக்கு பிரபல்யம் வாய்ந்தாக திகழ்ந்து வரும் நிலையில், தற்போது தனது புதிய பேட் காரின் மூலம் மீண்டும் ஒருமுறை மக்களின் கவனத்தை முற்றிலும் ஈர்த்துவருகின்றது.
இந்த அருங்காட்சியகம் , 21 அடி நீளமுள்ள கிரிக்கெட் மட்டைியின் வடிவத்தில் இயங்கக்கூடிய காரை உருவாக்கியுள்ளது. இந்த காரை பார்க்கும்போது, இது ஒரு நீளமான கிரிக்கெட் பேட் போலத் தோன்றினாலும், அருங்காட்சியக ஊழியர் ஒருவர், “இது வெறும் கிரிக்கெட் பேட் வடிவமைப்பு மட்டுமல்ல... இதை உண்மையிலேயே ஓட்டலாம்” என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த காரானது, முழுமையான இன்ஜின் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பேட் காரின் அடிப்பகுதியில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், ஃபார்முலா 1 கார்களை நினைவூட்டும் வகையில், ஓட்டுநருக்கான ஒரு சிறிய அறையும், வட்ட வடிவ ஸ்டீயரிங் சக்கரமும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
பேட்டின் மேல் பகுதியை திறந்து கார் ஓட்டுநர் உள்ளே செல்ல முடியும் வகையில் இது சிறப்பான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் பற்றி குறித்த அருங்காட்சியகத்தின் ஊழியர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |