திருமணம் முடிந்த பிறகு ஹேப்பி நியூஸ் சொன்ன மணிமேகலை! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கணவர்
மணிமேகலை- உசைன் இருவருமே தங்களுடைய ரசிகர்களுக்காக ஹேப்பி நியூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதாவது, தாங்கள் வாங்கிய நிலத்தில் முதன்முறையாக ஒரு நல்ல விஷயத்தை செய்து இருக்கிறார்கள்.
வீடு கட்டும் பணிக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்து இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டு இருக்கின்றனர். கல்யாணத்திற்கு பிறகு உழைத்து பணத்தை சேர்த்து அதில் நிலம் வாங்கி போர் போட்ட முதல் அனுபவத்தைப் பற்றி சந்தோஷத்துடன் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.
இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.