மனைவியின் கிட்னியை விற்று 2வது திருமணம் செய்த கணவர் - விசாரணையில் அதிர்ச்சி!
மனைவியின் கிட்னியை திருடி இரண்டாவது திருமணம் செய்த கணவரின் கொடூர செயல் ஓடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்தில் வசித்தவர் பிரசாந்த்(34). இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து 12 வருடத்துக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்துள்ளனர். அப்போது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியே காத்திருந்துள்ளது.
கிட்னி திருட்டு
பரிசோதனைமுடிவில் ரஞ்சிதாவின் ஒரு கிட்னி காணாமல் போயிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதிர்ச்சியில், 4 வருடத்திற்கு முன் நடந்த அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்துள்ளது.
கணவரின் கட்டாயத்தின் பேரில் அந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மனைவி ரஞ்சிதாவுக்கே தெரியாமல் அவரது கிட்னியை கணவர் பிரசாந்த் திருடி விற்றிருக்கிறார்.
பிரசாந்த் வேலை வெட்டிக்கு செல்லாமல் நாட்களை கழித்து வந்திருக்கிறார். பணப்பற்றாக்குறையில் இருந்த அவர், அந்த சமயத்தில் தான் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ரகசிய தகவல் பிரசாந்துக்கு தெரிய வந்துள்ளது.
ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே, உடனே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரசாந்த் கிட்னியில் கல் இருப்பதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மருத்துவர்கள் உதவியுடன் கல்லை எடுப்பதாக கூறி ஒரு கிட்னியை எடுத்துள்ளார் பிரசாந்த்.
இரண்டாவது திருமணம்
கிட்னி விற்ற பணத்தை வைத்துகொண்டு பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதனை அறிந்த மனைவி ரஞ்சிதா பிரசாந்தை கைது செய்ய கோரி ஆதாரங்களோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் இருந்த பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.