ரோஷினி ஹரிப்ரியாவின் கணவர் யார் தெரியுமா? இது தெரியாம போச்சே
ரோஷினி ஹரிப்ரியா தனது காதல் கணவரை திருமணம் செய்த புகைப்படங்கள் நேற்று வெளியானது. இந்த நிலையில் ரோஷினியின் கணவர் யார் என்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
வைரல் புகைப்படம்
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நடிகை ரோஷினிக்கு நேற்று திருமணம் நடந்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
நடிகை ரோஷினி ஒரு முறை கூட தன்னுடைய காதலர் யார் என்பதையும் சொல்லவில்லை அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லை.

ஆனால் நேற்று திருமண புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விடயம் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் யார் ரோஹினியின் கணவர் என தேடுகின்றனர்.
ரோஷினி திருமணம் செய்திருப்பது இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை தான்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஐரா, பொம்மை நாயகி, ஜீவி, களவு, தண்டட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தான் இந்த சுந்தரமூர்த்தி. இந்த விடயம் ரோஷினியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


