காதலன் தான் முக்கியம்.. கணவனின் கழுத்தை அறுத்த மனைவி! திடுக்கிட வைக்கும் சம்பவம்
தமிழகத்தில் காதலை கண்டித்த கணவனை மனைவி மற்றும் காதலன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பம் நகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனிஷ்கா (7) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அருண்குமார் கழுத்தில் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து உறவினர்கள் தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.
அருண்குமாரின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததால் கொலை வழக்காக பதிவு செய்த அதிகாரிகள், அவரது மனைவி வைஷ்ணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதாவது, வைஷ்ணவிக்கும், அதே ஊரை சேர்ந்த பக்கத்து தெருவில் வசிக்கும் குபேந்திரன் மகன் ஜெயச்சந்திரன் (26) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்தது.
இது அருண்குமாருக்கு தெரியவர கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது, ஒரு கட்டத்தில் கணவனை கொலை செய்ய திட்டமிட்ட வைஷ்ணவி உதவிக்கு ஜெயச்சந்திரனை அழைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதினத்தன்றும் சண்டை வர, ஜெயச்சந்திரனை வரச்சொல்லியுள்ளார் வைஷ்ணவி, அவர் அங்கு வந்ததும் இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வைஷ்ணவியையும், ஜெயச்சந்திரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.