மனைவியை கட்டிப்பிடித்து ரயில் முன் பாய்ந்த கணவர்! நெஞ்சை உறைய வைக்கும் காட்சி
கல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கட்டிப்பிடித்து தண்டவாளத்தில் விழுந்துள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து சென்ற தம்பதி
குறித்த காட்சியில் மாலை நேரத்தில் படுபிஸியாக இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில், தம்பதிகள் நடந்து செல்கின்றனர். இதில் மனைவி முன்பும், கணவர் பினேயும் நடந்து செல்கின்றனர்.
எதிரே மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்த வேலை கணவர், வேகமாக சென்று மனைவியை கட்டிப்பிடித்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டதுடன், அவர் மீது படுத்துக்கொண்டார்.
மனைவி கணவரின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியாத நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவரும் விபத்தில் சிக்கிய நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை காப்பாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கணவர் மனைவிக்குள் என்ன பிரச்சினை என்று தெரியாத நிலையில், இந்த சம்பவம் கல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...