வெறும் 20ரூபாயில் வீட்டின் பணக்கஷ்டம் காணாமல் போக வேண்டுமா? இந்த ஒரு பொருளை தானம் செய்ங்க
இன்று அநேகரின் பிரச்சினை பணமாகத் தான் இருக்கின்றது. நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நமது தேவைகளை சந்திப்பது என்பது கடினமாவதுடன், பணக்கஷ்டமும் ஏற்படுகின்றது.
ஆனால் இவ்வாறான பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் நாம் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். தானமாக மனிதர்களுக்கு மட்டுமின்றி எறும்புகளுக்கும் வழங்கலாம்.
எறும்புக்கு இந்த ஒரு பொருளை தனமாக கொடுத்தால், அந்த எறும்புகள் நூற்றுக் கணக்கில் சாப்பிட்டு விட்டு உங்களை மனதார வாழ்த்தும். இதற்காக நீங்கள் மாதம் 20 முதல் 50 ரூபாய் செலவு செய்தாலே போதும்.

பணக்கஷ்டம் தீர்க்கும் எறும்பு
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் வெல்லம் தான் உங்கள் கஷ்டத்தை போக்க வல்ல வல்லமை கொண்ட பொருள். இதனை நீங்கள் வாங்கி வைத்து கொண்டு தினமும் எறும்புகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
தானம் கொடுக்கும் முறை:
தினமும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் வீட்டில் நிலைவாசலுக்கு வெளியே, வலது புறத்தில் மண் இருந்தால் துடைத்து விட்டு, சிறிதளவு வெல்லத்துண்டை வையுங்கள். எறும்புகள் அவற்றை உண்டு, உங்களை வாழ்த்தும்.
ஓவ்வொரு நாளும் எப்படி, எறும்புகள் மெல்ல மெல்ல நீங்கள் கொடுக்கும் வெள்ளத்தை தின்னுகிறதோ அதே போல் உங்களது கஷ்டங்கள், மற்றும் பிரச்சனைகள் எல்லாம் மெல்ல மெல்ல தீர்ந்து சந்தோசம் நிலைக்க துவங்கும்.
இறைவன் படிப்பில் எறும்பும் ஒரு படைப்பு தான். எனவே அன்னத்தை மனிதர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. எறும்புகளுக்கு கொடுக்கலாம்.
