1000 வருட பழைய மம்மி தலையில் உயிருடன் இருந்தது என்ன? அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்....எதிர்பார்க்காத ட்விஸ்ட்
எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன.
எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் உள்ளன. சமீபத்தில் கூட எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒன்றின் பற்கள் அப்படியே வீணாகாமல் பதப்படுத்தப்பட்டு இருந்ததும் கூட கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வகையில் எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் Molecular Biology and Evolution என்ற ஆய்வு கட்டுரையில் வெளியாகி உள்ளது. மம்மி ஒன்றின் தலையில் கண்டுபிடிக்கப்பட்ட பேனில் இந்த ஜீன் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் அந்த பேனில் அப்போதும் கூட ரத்தம் உறைந்த நிலையில் இருந்துள்ளது.
அதேபோல் அந்த பேன் குஞ்சு பொரிப்பதற்காக மம்மியின் தலையில் சிமெண்ட் போன்ற பேஸ்ட் ஒன்றை சுரந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மாதிரிகளைதான் வெளியே எடுத்து சோதனை செய்துள்ளனர். சோதனையின் முடிவில் அந்த பேனில் மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மூலம் இந்த டிஎன்ஏ பேனுக்கு சென்று இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த பேன் ஒன்றில் மனித டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
இதன் மூலம் அப்போது வாழ்ந்த மனிதர்கள் குறித்து அதிகம் தெரிவித்து கொள்ள முடியும். பல திருப்பங்களை இது ஏற்படுத்த போகிறது.