Instagram-ல் Story பதிவிட்ட பின் இதை செய்ய மறந்துவிட்டீர்களா? அட இந்த அம்சம் போதுமே
Meta நிறுவனத்தின், Instagram என்னும் செயலி மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாகும்.
Instagram-ல் பயனர்கள் தனக்கென ஒரு கணக்கை தொடங்கி அதில் தங்களைப் பற்றி Post செய்தும், Story பகிர்ந்தும் மகிழ்வர்.
அந்தவகையில், உங்கள் Instagram Story-ல் யாரையாவது குறிப்பிட மறந்துவிட்டால் உங்கள் Story-யை Delete செய்யவோ அல்லது Re- upload செய்யவோ இனி தேவையில்லை.
Instagram Story-ல் add tags வசதி மூலம் உங்களது Story-யில் ஈசியாக Mention செய்துவிடலாம்.
Story பதிவிட்ட பின் எப்படி Tag செய்வது?
Instagram-ல் உள்ள உங்கள் Story பக்கத்தை கிளிக் செய்யவும். இப்போது எந்த Story -ல் உங்கள் நண்பரை Tag செய்ய வேண்டுமே அதை கிளிக் செய்யவும்.
பின் கீழே வலப்புறத்தில உள்ள 3 புள்ளி Menu பட்டனை கிளிக் செய்து ''More'' கொடுக்கவும்.
அடுத்து Menu பக்கத்தில் ''Add Mention'' என்பதை Select செய்யவும்.
இங்கு உங்கள் நண்பருடைய username Type செய்தால் Instagram அந்த பெயரை காட்டும்.
அடுத்து ''Add'' என்பதை கொடுத்தால் உங்கள் நண்பர் பெயர் Story-ல் Mention ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |