வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கணுமா? அப்போ இப்படி வைங்க
பொதுவாகவே சைவ உணவாகிலும் சரி அசை உணவாகிலும் சரி சமையல் என்றாலே அதில் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
வெங்காயத்தை தவிர்த்து உணவு சமைத்தால் சுவையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.மேலும் சுவையாக்க வெங்கயாம் அத்தியாவசிய மூலப்பொருளாக காணப்படுகின்றது.
அப்படிப்பட்ட வெங்காயத்தை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும்?
வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது ஈரப்பதத்துடன் இருந்தால் அல்லது வெங்காயத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அதனை வாங்க கூடாது. இத்தகைய வெங்காயத்தை அதிக நாட்களுக்கு சேமித்து வைத்து பாவிக்க முடியாது.
வெங்காயத்தை நல்ல காற்றோட்டம் கிடைக்க கூடிய உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அதே சமயம் சூரிய ஒளிப்படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும்.
வெங்காயத்தை அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்காமல் கூடைகளில் அல்லது காற்றோட்டமுள்ள பெட்டிகளில் வைக்க வேண்டியது அவசியம்.
பொதுவாகவே வெங்காயத்தை கிழங்குடன் சேர்த்து வைக்கும்த வழக்கம் சிலரிடம் இருக்கும். அப்படி இரண்டையும் ஒரே இடத்தில் வைத்தால் வெங்காயம் விரைவில் வீணாகிவிடும்.
வெங்காயத்தில் ஈரப்பதம் ஏற்பட்டால் பூஞ்சை வளர ஆரம்பித்துவிம். அதனால் வெங்காயத்தை சேமிக்கும் முன்னர் அந்த இடம் உலர்ந்துள்ளதா என உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |