அதிகம் சிந்திப்பவரா நீங்க? மற்றவர்கள் போல் மகிழ்ச்சியாக வாழ சில வழிமுறைகள்
தற்போது இருக்கும் அவசர உலகில் பலருக்கும் மன அழுத்தம் பிரச்சினை இருக்கிறது.
மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் எந்தவொரு விடயத்தையும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பார்கள். இதனால் கோபம், மனச்சோர்வு, களைப்பு, விருப்பம் இன்மை, சந்தேகம் மற்றும் வெறுப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், நிம்மதியாக இரவு வேளைகளில் உறங்க முடியாத நிலையும் உள்ளது. பதற்றம் மற்றும் தேவையற்ற கவலைகளால் நீங்கள் உங்களின் குடும்ப வாழ்க்கையிலும் நாட்டம் காட்டாமல் இருப்பீர்கள்.
இது போன்ற பழக்கங்களை உடனே நிறுத்தி, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கட்டுபடுத்தும் வழிமுறைகள்
1. அளவு அதிகமாக பிரச்சினைகளை நினைத்து காலத்தை வீணடிக்காமல் அதற்கான தீர்வினை சிந்திப்பது சிறந்தது. ஒவ்வொரு சாதகமான சூழலிலும், கவனம் செலுத்துவதைவிட்டு, மாற்றத்தைக் கொண்டு வர முயற்சித்தால் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
2. அதிகமாக சிந்திக்கும் ஒருவர் 72 மணி நேரத்துக்குப் பின்னர் இது பெரிய விஷயமா? எனக்கேட்பார்கள். அதனால் கவலைகள் மற்றும் பிரச்சினைகளை அவ்வளவு பெரிதாக நினைக்க வேண்டாம்.
3. அதிகம் சிந்திக்கும் பழக்கம் கொண்டவர்களால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது. இதனால் அவர்களின் வாழ்க்கை ஒரு நல்ல விடயம் கூட நடக்காமல் இருக்கலாம். எப்போதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
