முககவசத்தால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு வருடத்தில், முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும்.
சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது. அதிலும், சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும்.
முகக்கவசம் அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும். முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.
மேலும், வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும்.