கோடை கால நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இதை கட்டாயம் செய்தால் போதும்
கோடை காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலம்
பொதுவாக கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். உடலில் உஷ்ணம் அதிகமாவதால், நீர்ச்சத்தும் குறைந்துவிடுகின்றது.
இதனால் எளிதில் நோய் தாக்குதல் ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி சுற்றுபுறத்தினையும் தூய்மையாக வைப்பது மிகவும் அவசியம்.
உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் இருப்பதற்கு அதிகளவில் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை ஜுஸ், தர்பூசணி, வெள்ளரிக்காய் இவற்றினை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவும்.

கோடை நோயிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
கோடைகாலத்தில் ஏற்படும் அம்மை நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதாவது அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
வெயில் காலத்தில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படவும் வாய்ப்புள்ள நிலையில், எப்பொழுதும் காய்ச்சிய தண்ணீரை மட்டுமே பருக வேண்டும்.

வெயிலினால் ஏற்படும் சரும நோய்களைத் தடுப்பதற்கு, மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் சுத்தமாக குளிக்கவும்.
கோடை காலத்தில் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால் சமைத்ததும் சாப்பிடுவது சிறந்தது.

கண்தொடர்பான நோய்களும் அதிகமாக தாக்குகின்றது. எனவே குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது அவசியம் ஆகும். வெளியே வெயிலில் செல்லும் போது சன் கிளாஸ் அணிந்துகொள்ளவும்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |