வெள்ளி வாங்கினால் அசல்,போலி பார்த்து வாங்குங்க - இதோ டிப்ஸ்
வெள்ளி விலை தற்போது உயர்ந்து செல்லும் காரணத்தினால் அனைவரம் வெள்ளியை போலியை கண்டறியாமல் வாங்குகின்றனர்.
வெள்ளி
தங்கத்தின் விலை எப்படி தற்போது உச்சத்தை தொட்டுள்ளதோ அதே பேல தற்போது வெள்ளி விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெள்ளி வாங்கி முதலீடு செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ஆயிரத்தையும் கடந்து விற்கப்படுகின்றது. இப்படி வெள்ளி விலை மக்கள் அதிகமாக நுகர்வதால் சந்தையில் போலி வெள்ளியும் நுழைந்துள்ளது.
இது அவல் வெள்ளி விலைக்கு விற்கப்படுகின்றது. இதை மக்கள் வாங்கினால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே வெள்ளி சந்தையில் வாங்கும் போது அது அசல் வெள்ளியா போலி வெள்ளியா என்பதை பார்த்து வாங்குவது நன்மை தரும்.

போலி வெள்ளி கண்டறிவது எப்படி?
தற்போது சந்தையில் வெள்ளி பிஸ்கட் வடிவம் நாணய வடிவம் மற்றும் இந்த வடிவங்களை தவிர வெறு வடிவங்களிலும் வெள்ளியை மக்கள் நுகரக்கூடியதாக உள்ளது.
1.வெள்ளி நகை வாங்கினால் முதலில் ஹால்மார்க் சோதனை செய்து வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் வெள்ளி நகைகளில் 925, 999 அல்லது வெள்ளி முத்திரை போடப்பட்டிருந்தால் மட்டுமே அது தூய வெள்ளி எனப்படுகின்றது. இல்லை எனின் இது போலி வெள்ளி எனப்படுகின்றது.

2. வெள்ளி வாங்கும் போது அதை காந்தத்தில் ஒட்டிப்பார்த்து வாங்குவது அவசியம். வெள்ளி காந்தத்தில் ஒட்டிக்கொள்ளுமானால் அந்த வெள்ளி போலி வெள்ளி எனப்படுகின்றது.
3.வெள்ளியில் வாங்கி வைத்திருக்கும் ஏதாவது ஒர பொருளை கீழே போட்டு பருங்கள். அது சுத்தமான வெள்ளியாக இருந்தால் அது தரையில் விழும் போது ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பும். போலியான வெள்ளி அப்படி இல்லை கீழே விழுந்தவுடன் அது மந்தமான ஒலியை கொடுக்கும்.

4.வெள்ளி ஒரு துய்மையான வெப்பகடத்தி என்பதால் அதில் பனிக்ட்டியை வைத்த பின்னர் அந்த பனி வேகமாக உருகும். இது உண்மையான வெள்ளி எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |