எச்சரிக்கை… பெண்களே உள்ளாடை விஷயத்தில் இந்த பிழையை செய்யாதீர்கள்
women
By Nivetha
பல பெண்கள் உள்ளாடைகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை.
பெண்களின் மார்பகங்களை பராமரிக்க உதவும் பிராவை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
தவறான அளவுள்ள பிரா அணிவதால் தோள்பட்டை, மார்பு, கழுத்து, முதுகெலும்பு போன்றவற்றில் வலி ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
பொருத்தமான பிராவை தேர்ந்தெடுப்பதற்கான சில வழிகள்
- பிராவின் அண்டர்பேண்ட், விலா எலும்பை சுற்ற உறுதியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- தோள்பட்டை ஸ்ட்ராப் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அவை உங்கள் தோள்களில் அழுத்தத்திற்கான அடையாளத்தை பதிக்கக்கூடாது.
- மார்பகங்களை தாங்குவதில் 80 சதவீத ஆதரவு அண்டர்பேண்டிலிருந்து வர வேண்டும்.
- பிரா ஸ்ட்ராப்கள் மிகவும் இறுக்கமாக இருந்தால் தோள்பட்டை, முதுகெலும்பு போன்றவற்றில் வலியை ஏற்படுத்தக்கூடும்.
- மார்பகங்கள், பிராவில் இரண்டு பக்கங்களிலும் முழுவதுமாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கப் அளவு மிகவும் இறுக்கமாக இருந்தால் மார்பக தசைகள் பக்கவாட்டில் வெளிப்படக்கூடும்.
- உட்காரும் போதும், நடக்கும்போதும், நிற்கும் போதும், சரியான தோரணையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாம்.
- அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.
- பெண்களின் தேவைகளுக்கேற்ப சரியான பிராக்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது.
- தளர்ந்த மார்பகங்களை உடைய பெண்களுக்கு சரியாக பொருந்தும் வகையில் அண்டர் ஒயர் பிராக்கள் அமையும். இதன் மூலம் மார்பகங்கள் மேலும் தளராமல் பார்த்துக்கொள்ளலாம்.
- பாலூட்டும் பெண்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் பாலூட்டும் போது சிரமமில்லாமல் கையாளலாம்.
Buttermilk: பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது? 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US