புதிதாக வாங்கிய மண்பாண்டத்தில் சமைக்க விருப்பமா? அப்போ உங்களுக்குதான் இந்த 2 டிப்ஸ் அவசியம்

cooking pot
By Nivetha Jul 28, 2021 02:00 AM GMT
Report

மண்பாண்டத்தில் சமைக்க முயற்சிப்பவர்களுக்கு உணவிற்கு சுவையுட்டும் விதமாக மண்பாண்டங்களை தயார்படுத்தும் இரண்டு முறைகளை சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் பகிர்ந்துள்ளார்.

மண்பாண்டத்தில் சமைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அது உணவை மெதுவாக வேக வைக்கிறது. அது மட்டுமல்லாமல், சமைக்கிற உணவுப் பொருளில் ஊட்டச்சத்தை தக்கவைக்கிறது.

உணவுக்குள் உலோகம் செல்கிற ஆபத்தையும் தடுக்கிறது. மண்பாண்டங்கள் வெப்பத்தை எதிர்க்கும் தன்மைக் கொண்டவை. இவை எண்ணெய் மற்றும் உணவிலுள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

அதனால், தேவையில்லாத கொழுப்பை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மண்பாண்டங்களில் சமைப்பதற்கு முன்பாக அவற்றை தயார்படுத்த வேண்டும்.

நீங்கள் சமைக்கும் மண்பாணையை தயார்படுத்துகிற வழிமுறைகளை சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் கூறுகிறார்.

மண்பாண்டங்களை சமைப்பதற்கு தயார்படுத்தும் வழிமுறைகள்

  1. மண்பாண்டங்களை சமையலுக்காக உபயோகிக்கும் முன் 8-10 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  2. மண்பாண்டங்களில் நுண் துளைகள் இருக்கின்றன. அதனால், தண்ணீரில் ஊற வைப்பதனால் ஈரப்பதத்தை உண்டாக்குகிறது.
  3. அது உணவை வேக வைப்பதற்கும் வெப்பத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
  4. பிறகு மண்பாண்டத்தில் கூடுதலாக நீரை ஊற்றி அதனைக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது மண்பாண்டம் பக்குவப்படுத்தப்பட்ட நிலையில் உபயோகப்படுத்த தயாராக உள்ளது.

மண்பாண்டங்களை சமைப்பதற்கு தயார்படுத்தும் முறை 2

மண்பானையில் கொஞ்சம் கோதுமை மாவை போட்டு அதை எல்லா பக்கங்களிலும் தேய்க்கவும்.

மாவு தேய்ப்பதால் மண்பாண்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண் துகள்கள் உதிர்வதற்கு உதவுகிறது.

இந்த கூடுதலான மாவு மண்பாண்டத்தில் உள்ள தூசியை அகற்றுகிறது. இப்போது பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டுங்கள்.

மாவு கருப்பு நிறமாக மாறும் வரை சூடாக்குங்கள். அடுத்து ஒரு மஸ்லின் துணியால் பானையை சுத்தமாக துடையுங்கள். பாணையின் வெப்பத்தை போக்குங்கள். பானை முழுவதுமாக குளிர வேண்டும். இப்போது பானை பயன்படுத்த தயாராக உள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US