Wi-Fi password மறந்துவிட்டால் இலகுவாக கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவாக நம்மில் பலர் Password மறப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் திடீரென வீட்டிலுள்ள Wi-Fi password கேட்பார்கள். அந்த சமயத்தில் சிலர் மாத்திரமே சரியான பதில் கொடுப்பார்கள்.
இப்படி ஒரு அவசரத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள Wi-Fi password மறந்து விட்டதா? இனி கவலை வேண்டாம், அதனை நாம் நமது போனில் இருந்து மீட்டெடுத்து கொள்ளலாம்.
எப்படியும் உங்கள் வீட்டு Wi-Fi போனுடன் Connect செய்யப்பட்டிருக்கும், அதன் மூலம் உங்களது Wi-Fi password-ஐ பார்க்கலாம்.
அப்படியாயின் மறந்து போன Wi-Fi password-ஐ எப்படி இலகுவாக கண்டுபிடிக்கலாம் என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
1. Android போன்கள்
Android போன்கள் பயன்படுத்தும் பயனர்கள் Wi-Fi password மறந்து விட்டால் கீழ் வரும் முறையில் கண்டுபிடிக்கலாம்.
- Google Pixel> Settings > Network -ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
- அங்குள்ள Option-களில் Wi-Fi network எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
- அந்த இடத்தில் gear icon என்ற Option -ஐ கிளிக் செய்தால் QR code உடன் Wi-Fi password உள்ள விவரங்கள் காண்பிக்கப்படும்.
2. Samsung போன் பயனர்கள்
Samsung போன் பயனர்களாக இருந்தால் கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளின் படி Wi-Fi password கண்டுபிடிக்கலாம்.
- Settings> Connections > Wi-Fi அதனை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் Wi-Fi network எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
- அந்த Option உள்ளே சென்றால் gear icon எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அடுத்தப்படியாக eye icon காண்பிக்கப்படும்.
- அதன் உள்ளே சென்று பார்த்தால் identity உறுதி செய்யும்படி கேட்கும்.
- அதனை சரியாக செய்து விட்டால் மறந்து போன Wi-Fi password-ஐ பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |